"உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் "
"50 ஆண்டு பொன் விழா மாநாடு" இந்தியா தமிழ் நாடு,சென்னை.
"யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்ற உலகப் பண்பாட்டை நோக்கி பயணிக்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 50 ஆம் ஆண்டு "பொன் விழா" தமிழகத்தில் தலைநகர் சென்னையில் ஐனவரி 4,5 ஆம் தேதி 2025 இல் நடத்தப்படுகிறது.
உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மொழி, கலாச்சாரம், பண்பாடு, கல்வி, மருத்துவம், மருத்துவ படிப்புக்கள், மருத்துவ பராமரிப்பு, சமூக நல்லிணக்கம், வேலை வாய்ப்பு, பொழுது போக்கு, மனித மேம்பாடு போன்ற பல காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட இவ் இயக்கம் இன்று உலகளாவி 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மேல் தொடர்ந்து பயணித்து வருகின்றது.
அந்த வகையில் இந்த "பொன் விழா" மாநாட்டுக்கு இங்கிலாந்தில் உள்ள தலைவர், கனடாவில் உள்ள தலைவர், ஜெர்மனியில் உள்ள பொறுப்பாளர், ஜரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பொறுப்பாளர் யாருக்கும் அழைப்பிதழ் அனுப்பாமல் உலகத்தமிழர் ஒன்று கூடுங்கள் என்று அழைப்பிதழில் போடுவது சரியானதா? தமிழர் பண்பாடு, கலாச்சாரம், என்று ஆரம்பிக்கப் பட்ட இந்த இயக்கம் 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் உறவுகளின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்தது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு. "தவத்திரு தனிநாயகம் அடிகளாரின்" முயற்சியால் 1964-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research - IATR), இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்ட நிகழ்வு.
இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10, 1974 இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒன்பது பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர் அதோடு 50 பேர் காயமடைந்தனர். காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன இந்த மரணங்களுக்குக் காரணமாயின. இந்த இறப்புகள், பின்னர் தீவிரமாக வெளிப்பட்ட தமிழ்த் தேசியவாத போக்குக்கு உந்திய ஒரு முக்கிய துன்பியல் நிகழ்வு ஆகும். இவ் நிகழ்வை நினைவு கூறும் வகையி்ல் ஒவ்வாரு ஆண்டும் அனுஷ்டிக்க படுகின்றது. திருக்குறள், தொல்காப்பியம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மூத்த குடிகளுக்கு இப்படி ஒரு நிலைக்கு பிறகு தமிழன் வீறுகொண்டு எழுந்திட வேணுமல்லவா தமிழா தமிழால்!
இதற்கு பிறகும் நாம் ஒன்றுபட்டு ஒரு குடும்பமாய் சேர்ந்து வாழாமல் ஒரு தலைப்பில் பெயர் கொண்ட நல் இயக்கத்தை மூன்று பிரிவாக பதிவு செய்து பெயர் வாங்கவும், பெருமைக்காக தமிழ் இனத்தின் ஒற்றுமையை சந்தி சிரிக்க வைப்பதே இதன் நோக்கமே தவிர! தமிழர் பண்பாட்டை வளர்ப்பதற்காக நினைப்பது தவறு!
ஆதியில் தோன்றிய மூத்த மொழி !
இலக்கியம் பல இயற்றிய மொழி!
கம்பன் கவி படைத்த மொழி!
ஐயன் வள்ளுவன் வாய் மொழி!
ஒளவை பாடிய இலக்கிய மொழி!
எங்கள் செந்தமிழ் வாழ்க !
வையக்கத்தில் மேலோங்கி நிலைத்து நிற்க!...
ஒன்று சேர்ந்து ஓசை இடு.
இங்கிலாந்திலுள்ள "உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்"
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus ullam corper mattis, pulvinar dapibus leo.

Promoting Tamil language
Tamil history and cultural
IMTC was founded to create a greater awareness of Tamil history and rich Tamil cultural by organising the cultural events and promoting Tamil language. IMTC has proved that it possesses the necessary knowledge, experience and vision to promote the Tamil culture in India, Sri Lanka and abroad.
About Us

Get in Touch
- Organisation registration number 12673950