horso by Themebuzz
  • imtcuk@mail.com
  • +44 7939474342
  • 16 Danethorpe Road Wembley Middlesex UK HA0 4RQ

555
+

Happy Client

100
+

Working Speed

755
+

Servicing Car

155
+

Working Award
News

News Articles

திரு.ப.கு.சண்முகம்
தலைவர்,
மலேசிய தமிழ்ப்பண்பாட்டு இயக்கம்,
கிள்ளான், சிலாங்கூர்.
மலேசியா.

அன்புடையீர், வணக்கம்.

முனைவர் பஞ்.ராமலிங்கத்தின் சட்டத்திற்குப் மாறான நடவடிக்கைகள்.

கனடா நாட்டில் பதிவுப் பெற்று, அங்கு தலைமைப்பீடத்தைக் கொண்டு செயல்படும் உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் ( International Movement for Tamil Culture – IMTC) நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்தியா,பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் முனைவர் பாஞ்.ராமலிங்கம் அவர்கள் செயல்பட்டு வருகிறார். உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் சிறப்புத்தலைவர் என்று கூறிக்கொண்டு தலைமைப்பீடத்திற்குத் விரோதமாக, தமக்கு வேண்டிய சிலரைச் சேர்த்துக் கொண்டு பல உலக நாடுகளில் உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தி மாநாடுகளை நடத்திவருகிறார். அம் மாநாடுகளுக்கான கட்டணத்தை தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கு ஊடாக வசூலித்து வருகிறார்.

இதேவேளை. உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் பெயரையோ, அதன் சின்னத்தையோ பயன்படுத்தம் உரிமையோ அன்றி அதிகாரமோ, முனைவர் பாஞ்.ராமலிங்கம் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு இல்லை.

மேலும், உலகத் தமிழர் பண்பாட்டு மன்றத்தின் (WTCO) தொடக்க விழாவும் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் (IMTC) பொன் விழாவும் மலேசியாவில் எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அறிப்பு வெளியாகியுள்ளது.

இவ்விழாவில் இந்தியாவின் மத்திய துணையமைச்சர் மாண்புமிகு டாக்டர்.எல். முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கின்றார் எனவும் அறிவிக்கப்பெற்றுள்ளது. அதேவேளையில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின்(IMTC) சிறப்புத் தலைவர் பேராசிரியர் பாஞ்.ராமலிங்கம் என்றும்; உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் (IMTC) தலைவர் டாக்டர். ஏ.பகீரதன் என்றும் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டு இவ்விருவரும் மேற்படி விழாவில் கலந்து கொள்கின்றனர் என்றும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தடன் அவர்களால் எமது உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் சின்னமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் பதிவு பெற்றுள்ள உலகத் தமிழர் பண்பாட்டு மன்றத்தின் (WTCO) பொறுப்பாளர்களைத் தவறாக வழிநடத்தி, சட்டத்திற்கு மாறாக இயக்கத்தின் பெயரையும் சின்னத்தையும் தங்கள் பதவிகளையும் பயன்படுத்தி, முனைவர் பாஞ்.ராமலிங்கம் மற்றும் டாக்டர் ஏ.பகீரதன் ஆகிய இருவரும் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.
எனவே,, இவர்கள் மீது எமது தலைமைபீடம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதேசமயம் மலேசியா தமிழ்ப்பண்பாட்டு இயக்கமும் தலைமைபீடத்திற்கு ஆதரவாகவும் ஒத்துழைப்பாகவும் செயல்படும் வகையில், இவர்கள் நம் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி களங்கம் கற்பிக்கும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இங்ஙனம்
துரை கணேசலிங்கம்,
செயலாளர் நாயகம்
உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், தலைமையகம்
கனடா.

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். “

பிறருடைய துன்பத்தைக் கண்டு தம்மையறியாமல் ஒருவரது கண்கள் கலங்குவதுதான் அன்பின் அடையாளம். அந்த அன்பு உணர்ச்சிக்குத் தாழ் இட முடியாது.

-திருக்குறள் 71

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் இயற்கை எய்தினார். பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் நிறுவுநரும் மூத்த தமிழறிஞருமான அவரின் இழப்பு தமிழுக்கு ஒரு மூத்த அறிஞரை இழந்து விட்டது ! அவரின் ஆன்மா சாந்தியடைய எங்கள் இயக்கம் சார்பாக வஞ்சமில கவிஞன் வாழிய வென்று வாழ்த்தி நெஞ்சம் நெகிழ்ந்தோம். நாங்கள் நன்றி நல்கிறோம். அவர் பெயர் வாழ்கவென்றே!

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின்  தூணாகவும் அதன் தமிழ்நாட்டுக் குரலாகவும் விளங்கிய வா.மு. சேதுராமன் அவர்களின் இழப்பு  ஏற்படுத்திய அதிர்வு இன்னும் எம்மை விட்டு நீங்கவில்லை. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்  செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிப்பு! 

பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனரும் உலகின் பல நாடுகளிலும் கிளைகளைக் கொண்ட சர்வதேச அமைப்பான உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தமிழ்நாட்டின் தூணாகவும் அதன் குரலாகவும் விளங்கிய  பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்  அவர்களின் திடீர் மறைவு எமது அமைப்பின் நூற்றுக்கணக்கான  உறுப்பினர்களின் மனங்களை உறையச்  செய்துள்ளது.  தமிழ் மொழி மீதான ஆழமான பற்றும் அக்கறையும் அவரை இத்தனை ஆண்டு காலம் வாழ வைத்துள்ளது. அத்துடன்  உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பத்துக்கு மேற்பட்ட மாநாடுகளில் பங்கு பற்றி இயக்கத்தின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டவராக விளங்கினார்.அத்துடன் ‘உலகக் கவிஞர்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இணைந்து  கொண்டு பல்வேறு மொழிகளில் கவிதைகள் வடிக்கும் கவிஞர் பெருமக்களோடு உரையாடியும் உறவாடி மகிந்து பல மாநாடுகளிலும் பங்கு பற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது கைகளுக்குள் வந்துவிட்ட  கவிதை என்னும் அழகின் வடிவத்தை செப்பனிட்டு மகிழ்ந்த  அவர்கள் கவிதை இலக்கணத்தின் உச்சத்தைத் தொட்டவர் என்றால் அது மிகையாகாது”. இவ்வாறு.  தமிழ்நாட்டின் சென்னை மாநகரில் தனது இன்னுயிரை நீத்த வண்ணம் இறுதிக் கிரியைகளுக்காக காத்திருக்கும் பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் அவர்களின் மறைவை முன்னிட்டஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்  செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்(90) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள ஆண்டநாயகபுரத்தில் 1935-ம் ஆண்டு பிறந்தவர் வா.மு.சேதுராமன். 1988-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின்  தூணாகவும் அதன் தமிழ்நாட்டுக் குரலாகவும் மேற்படி இயக்கத்தின் பல மாநாடுகள் காத்திரமாகவும் பண்பாட்டுக் கோலங்கள் கொண்டவையாகவும் இடம்பெற தனது அனுபவத்தையும் ஆற்றலையும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்காக பயன்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்  செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பெற்றுள்ளதாவது:-

“சென்னையில் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அத்துடன் அரசியல் தலைவர் ஆகியோர் அஞ்சலி செலுத்தும் முகமாக சென்னையில் உள்ள  இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இழப்பு கலைஞர் கருணாநிதி அவர்களின் குடும்பத்தினரையே அதிகம் வாட்டியுள்ளது என்பது தமிழ்நாட்டில் தமிழக அரசும் அதன் முதலவர் அவர்களும் விடுத்துள்ள அறிக்கைகளிலிருந்து இந்த முக்கியத்துவம் நன்கு புலனாகின்றது. 

 வா.மு.சேதுராமன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் காவல்துறையின் மரியாதையுடன் பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் அவர்களின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவு இட்டுள்ளமையும் இதற்குச் சான்றாகும்.

சென்னையில் 31/12 காளியம்மன் கோவில் தெரு சின்மயா நகர் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் முக்கிய உறுப்பினர்கள் அங்கு சென்றுள்ளனர். எமது இயக்கத்தின் சார்பிலும் அன்னாரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலர்வளையம வைத்து மரியாதை செய்யவும் தீர்மானிக்கப்பெற்றுள்ளது.

அமரத்துவம் அடைந்த பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் அவர்கள் ஈழத்தமிழ் இலக்கியவாதிகளோடும் அறிஞர்களோடும் நீண்ட நாள் நட்புக் கொண்டவராக விளங்கினார். ஜேர்மனி, கனடா, சுவிற்சலாந்து, தென்னாபிரிக்கா, மலேசியா, பிஜி தீவுகள், இலங்கை, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் நடைபெற்ற தமிழ்ப் பண்பாட்டு விழாக்களிலும் நூல் வெளியீட்டு விழாக்களிலும் கலந்து சிறப்பித்தவர். கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்தி வரும் சர்வதேச விருதுகள் விழாவில் அவருக்கு 1917ம் ஆண்டிற்குரிய ‘வாழ்நாள் சாதனையாளர் விருது- தமிழ்நாடு’  என்னும் உயர் விருது வழங்கப்பெற்றது. அதனைப் பெறுவதற்காக பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் ரொறன்ரொ நகருக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில்  திருவல்லிக்கேணி முஸ்லீம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தமிழ்ப்பணி என்ற பெயரில் சிறு பத்திரிக்கையை தொடங்கி தனது இறுதிகாலம் வரை நடத்திவைந்தார். நெஞ்சத்தோட்டம், தமிழ் முழக்கம், தாய் மண், காலக்கணி, சேது காப்பியம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.

இவரது தமிழ்த் தொண்டினை பாராட்டி தமிழ்நாடு அரசு 1990-ம் ஆண்டு கலைமாமணி விருதினையும், 2001-ம் ஆண்டு திருவள்ளுவர் விருதினையும் வழங்கி கௌரவித்தது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரோ நெருக்கமான  நட்பு பாராட்டியவர். கடந்த மே மாதம் கலைஞர் காவியம் என்ற கவிதை நூலை கடைசியாக வெளியிட்டிருந்தார். வ.மு.சேதுராமன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் தமிழுக்காகவே தன்னை ஒப்படைத்தவர் என கலைஞரால் பாரட்டப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்.

 



Tamil Language, Culture, and tradition are embedded in 1330 kurals, dating back some ten thousand years. We must preserve it for our generations.

Please donate to the Thiruvalluvar statue opening ceremony organized by the Tamil Historical Society in Oxford.

The names of the people who give donations will be written on a plaque.

Metro Bank Community Account
BIC: MYMBGB2L
IBAN: GB11MYMB23058045256251
ACCOUNT NAME: WORLD TAMILS HISTORICAL SOCIETY
Account number: 45256251
Sort code: 23-05-80

Please donate.

RISEUK
IMTC
IBN
CMA

போப் பிரான்சிஸ் காலமானார்! இறுதிச்சடங்கு எப்போது? வாடிகனின் விதிமுறைகள் என்ன சொல்கின்றன?

ஆயிஷா, லௌபரோ பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு உளவியல் மாணவி. 2025 கோடையில், மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையை ஏறும் நம்பமுடியாத சவாலை எதிர்கொள்கிறார்.

Dig Deep போன்ற ஒரு நிறுவனத்திற்கு இதை இன்னும் சிறப்பாகச் செய்ய விரும்புகிறார். இவரது இலக்கு £2990, இதில் 50% தொண்டு நிறுவனத்திற்கும் 50% விமானங்களைத் தவிர்த்து மலை ஏறுவதற்கான இவரது உள்நாட்டுச் செலவுகளுக்கும் செல்கிறது.

உங்கள் ஆதரவு உயிர்களைக் காப்பாற்றும், கல்வியை மேம்படுத்தும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும். இவரது இலக்கை அடைய இவருக்கு உதவும் எந்தவொரு ஆதரவும் மிகவும் பாராட்டப்படும்!

 

“உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் “

“50 ஆண்டு பொன் விழா மாநாடு” இந்தியா தமிழ் நாடு,சென்னை.

“யாதும் ஊரே யாவரும் கேளீர் ” என்ற உலகப் பண்பாட்டை நோக்கி பயணிக்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 50 ஆம் ஆண்டு “பொன் விழா” தமிழகத்தில் தலைநக‌ர் சென்னையில் ஐனவரி 4,5 ஆம் தேதி 2025 இல் நடத்தப்படுகிறது.

உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மொழி, கலாச்சாரம், பண்பாடு, கல்வி, மருத்துவம், மருத்துவ படிப்புக்கள், மருத்துவ பராமரிப்பு, சமூக நல்லிணக்கம், வேலை வாய்ப்பு, பொழுது போக்கு, மனித மேம்பாடு போன்ற பல காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட இவ் இயக்கம் இன்று உலகளாவி 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மேல் தொடர்ந்து பயணித்து வருகின்றது.

அந்த வகையில் இந்த “பொன் விழா” மாநாட்டுக்கு இங்கிலாந்தில் உள்ள தலைவர், கனடாவில் உள்ள தலைவர், ஜெர்மனியில் உள்ள பொறுப்பாளர், ஜரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பொறுப்பாளர் யாருக்கும் அழைப்பிதழ் அனுப்பாமல் உலகத்தமிழர் ஒன்று கூடுங்கள் என்று அழைப்பிதழில் போடுவது சரியானதா?

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் இலட்சனையையும் தொடர்ச்சியாக சட்ட விரோதச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வரும் மாவை சேனாதிராஜாவின் சகோதரர் ஜேர்மனி வாழ் மாவை தங்கராசா அவருக்கு உடந்தையாகச் செயற்படும் அமரர் அ. அமிர்தலிங்கத்தின் புதல்வர் இங்கிலாந்து வாழ் அ.பகீரதன் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம்

குறிப்பாக கடந்த ஆண்டு பங்குபற்றியதை விட இந்த ஆண்டு 198 மாணவர்கள் கூடுதலாக பங்குபற்றியுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

நடைபெற்ற போட்டியின் முடிவுகளை (14.06.2023) ஆம் திகதி பாடசாலை அதிபர் ஊடாக அல்லது கல்விச்சேவையின் இணையதளத்தில் பார்வையிட்டு அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By மதுரன் தமிழவேள்

Dear Prof Ramalingam and Mr Ilanchelian,

The 4th World Tamil Conference that took place in Jaffna which ended prematurely with loss of 11 innocent persons

During this year 1974 I was a 2nd year Medical Student at Colombo Medical School University

The conference office was at No 17 Alfred Place Kolupity Colombo 3

Regularly organisers met at this place during the previous year to make it a success

Mr Ambavanar who am expert Income tax lawyer of Srilanka and the twin brother of Kopay MP Mr Kathiravetpillai was kind enough to to use his office as organising secretariate

I was lucky to get a free accommodation in this office for the 5 years of medical studies Without this help it would have been impossible for me to complete my studies

My Patrician schoolmate was instrumental to get this help through his father who is also a lawyer

Then there was lots of difficulty in getting permission to have the meeting in Jaffna Government wanted to have it in Colombo

Finally it took place in Jaffna

On the final day while an Tamil Nadu spear was addressing the police fired in the air to disperse the gathering I understood the speaker did not obtain the visa to come for this conference Consequently the electricity wires which was fired was caused the death of the 11 lives

Subsequently the Tamil Research conferences was continued in different countries and this time in 2023 September the 16th conference is going to take place in Mauritius

ITMC is a UNESCO supporting organisation

மிகவும் சுதந்திரமாக ஈர்க்கப்பட்ட தமிழ் காதல் கதை.

டி.டி.(ரோம்), எம்.ஏ.., எம்.லிட் (அண்ணாமலை) பிஎச்.டி. (லண்டன்)

பிரித்தானியாவில் தமிழர்களுக்கென பிரத்தியேகமாக தமிழ் புத்தக கண்காட்சி நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.

About Us

IMTC was founded to create a greater awareness of Tamil history and rich Tamil cultural by organising the cultural events and promoting Tamil language. IMTC has proved that it possesses the necessary knowledge, experience and vision to promote the Tamil culture in India, Sri Lanka and abroad.

Get in Touch

Our Location